இந்தியாவுக்கு மிகப்பெரிய செக்… “200% வரி உயர்வு…” மருந்து விலை விண்ணைத் தொடுமா…? ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு…!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

அமெரிக்காவில் உள்நாட்டு மருந்து தயாரிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகளுக்கு 200 சதவீதம் வரை சுங்க வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த வரி உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வராமல், வரும் 2028-ஆம் ஆண்டு முதல் படிப்படியாகச் செயல்படுத்தப்படும் என்றும், அதற்குள் நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே ஆலைகளை நிறுவ கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பிராண்டட் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளுக்குத் தற்போதைய கொள்கையே தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி மருந்து ஏற்றுமதி நாடான இந்தியாவிற்கு இந்த புதிய வரி விதிப்பு பெரும் பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், அமெரிக்கா பயன்படுத்தும் மொத்த ஜெனரிக் மருந்துகளில் சுமார் 40 சதவீதம் இந்தியாவிலிருந்தே விநியோகிக்கப்படுகிறது. ஏற்கனவே இரு நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு, இந்திய மருந்து நிறுவனங்கள் மட்டுமன்றி குறைந்த விலையில் மருந்துகளை நம்பியிருக்கும் அமெரிக்க மக்களையும் கடுமையாகப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.