தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இணைந்தால் வெறும் ஆறு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியானதால் தமிழக அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலால் கடும் அதிருப்தி அடைந்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது, தேமுதிகவுக்கு 6 இடங்கள் என செய்தியை பரப்பிய கட்சிக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது என்று ஆக்ரோஷமாக எச்சரித்தார். இது கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இந்த புகாருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதை யாரிடம் சொன்னார்களோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறி அங்கிருந்து நழுவி சென்றார். வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி நடைபெற உள்ள தேமுதிக பொதுக்குழுவில் பிரேமலதா தன்னுடைய கூட்டணி முடிவை அறிவிப்பார் என்றும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் ஜனவரி 20ஆம் தேதிக்குள் நல்ல முடிவை எடுப்பார்கள் எனவும் எதிர்பார்ப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கள் அதிமுக கூட்டணி மற்றும் மூன்றாவது அணி குறித்த விவாதங்களை தமிழகத்தில் மீண்டும் எழுப்பியுள்ளது
அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி (EPS) உடன் மீண்டும் இணைய எஸ்பி வேலுமணி (SP…
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கான இலவசப் பயணத் திட்டம் எப்போது…
பீகாரில் நடந்த இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம், கேட்பவர் எவரையும் உறைந்து போகச் செய்யும். ஒரே படுக்கையில் ஒன்றாக ஆசையாய்…
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா பகுதியில், சந்தேகப் பேயால் கணவனே தனது கர்ப்பிணி மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்…
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை எப்போது வழங்கப்படும்…
அமெரிக்காவைச் சேர்ந்த 57 வயதான டயானா கிரீபெல் (Diana Kriebel) என்பவர், மரணத்தை நெருங்கும் நபர்களுக்கு உணர்ச்சி மற்றும் உடல்…