“உடலை வாங்க யாரும் வரல”.. பிணவறையில் கிடக்கும் நடிகர் சத்யேந்திராவின் உடல்.. கேப்டன் வழியில் பிரேமலதா செய்த ‘அந்த’ காரியம்.. சினிமா உலகை உலுக்கிய சோகம்..!!!

By Muthu Mani on வைகாசி 29, 2026

Spread the love

‘மண்வாசனை’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ உள்ளிட்ட திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள சத்யேந்திரா, சினிமா விமர்சகராகவே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். புதிய திரைப்படங்களுக்குத் தனித்துவமான பாணியில் இவர் வழங்கிய விமர்சனங்கள் யூடியூப் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட சத்யேந்திராவின் உடலைப் பெற்றுக்கொள்ள உறவினர்கள் யாரும் முன்வரவில்லை என்றும், யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவரது உடல் ராயப்பேட்டை மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற நிலையில் உள்ள அவரது இறுதிச் சடங்கு குறித்து நடிகை வினோதினி வைத்தியநாதன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்நிலையில், சத்யேந்திராவின் உடலை அடக்கம் செய்யத் தேமுதிக தயாராக இருப்பதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கிற்கு உறவினர்கள் யாரும் இல்லாத பட்சத்தில், ‘கேப்டன் வள்ளல் விஜயகாந்த் அறக்கட்டளை’ சார்பில் மருத்துவமனை மற்றும் இறுதிச் சடங்கு செலவுகள் அனைத்தையும் ஏற்று, மனிதநேய அடிப்படையில் உதவத் தயாராக இருப்பதாகத் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.