உயிரை நெஞ்சிலும்.. உருவத்தை கையிலும்.. சுமக்கும் மறைந்த நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா… வைரலாகும் புதிய டாட்டூ வீடியோ…

By Begam

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிகராக மட்டுமின்றி, தேமுதிக கட்சியின் தலைவராகவும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர். பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி விஜயகாந்த் இயற்கை எய்தினார்.

   

பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு நடிகர் விஜயகாந்தின் உடல் கண்ணாடி பெட்டியில் இருந்து ‘புரட்சி கலைஞர்’ கேப்டன் விஜயகாந்த் என்ற வாசகமும், அவரின் பிறப்பு இறப்பு தேதிகளும் இடம் பெற்ற சந்தன பேழையில் வைக்கப்பட்டு , அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து விஜயகாந்த் மறைவால் அவரது மனைவி பிரேமலதா மற்றும் இரு மகன்களும் கதறி அழுத விடீயோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போரை கலங்க வைத்தது. விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

காதல் கணவரை பிரிந்து வாடும் பிரேமலதா தனது தற்பொழுது கணவர் விஜயகாந்தின் உருவத்தை கையில் டாட்டூவாக குத்திக் கொண்டுள்ளார்.  தற்பொழுது அவரின் இந்த செயல் தேமுதிக தொண்டர்களையும், கேப்டன் ரசிகர்களையும் சந்தோச கடலில் மூழ்கடித்துள்ளது. ஆனால் ஒரு சிலரோ இதனை அவரின் அடுத்த தேமுதிக கட்சியின் ஒரு நகர்வாகவே பார்பதாகவே கமெண்ட் செய்து வருகின்றனர்.  இதோ அந்த வீடியோ…