“கேப்டன் பாணியில் களமிறங்கும் பிரேமலதா”… திமுக கூட்டணியில் தேமுதிக எடுத்த ‘மாஸ்’ முடிவு… அண்ணியார் களமிறங்கும் தொகுதி இதுதானா..?

Spread the love

தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பமாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக களம் காண்பது உறுதியாகியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டணியின் கீழ் தேமுதிகவிற்கு 10 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை (Rajya Sabha) இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. எல்.கே. சுதீஷ் தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விருகம்பாக்கம், விருதுநகர், பண்ருட்டி உள்ளிட்ட 25 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலை தேமுதிக தரப்பு திமுகவிடம் வழங்கியுள்ளது.

இந்தத் தேர்தலின் மிக முக்கிய அம்சமாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் முதன்முறையாகத் தேர்தல் களத்தில் இறங்க உள்ளார். விஜயகாந்த் அவர்கள் அரசியலில் தடம் பதித்த சென்டிமென்ட் தொகுதிகளான விருத்தாச்சலம் அல்லது ரிஷிவந்தியம் ஆகியவற்றில் ஒன்றை பிரேமலதா தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 2006-ல் விஜயகாந்த் தனித்து நின்று வென்ற விருத்தாச்சலம் தொகுதிக்கு முதலிடம் அளிக்கப்படும் நிலையில், அங்குச் சாதகமான சூழல் அமையாவிட்டால் 2011-ல் அவர் வென்ற ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா போட்டியிடக்கூடும்.

குறிப்பாக, தேமுதிக குறிவைக்கும் இந்த இரண்டு தொகுதிகளும் எதிர்முனையான அதிமுக கூட்டணியில் பாமக வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப் பகுதிகளில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த காலங்களில் அதிமுக மற்றும் காங்கிரஸ் வசம் சென்ற விருத்தாச்சலத்தையும், திமுகவின் பிடியில் இருக்கும் ரிஷிவந்தியத்தையும் மீண்டும் தேமுதிகவின் கோட்டையாக மாற்றப் பிரேமலதா திட்டமிட்டுள்ளார். விஜயகாந்தின் அரசியல் பயணத்தைத் தொடங்கிய இடத்திலிருந்தே தனது தேர்தல் பயணத்தையும் தொடங்க அவர் ஆர்வமாக உள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியானதும், பிரேமலதா போட்டியிடும் தொகுதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது கணவர் கேப்டன் விஜயகாந்த் மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தையும், திமுகவின் வாக்கு வங்கியையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்யத் தேமுதிக இப்போதே தயாராகி வருகிறது. தமிழக அரசியலில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு உதயசூரியன் சின்னத்தோடு முரசு முழங்குமா அல்லது தனிச் சின்னத்தில் களம் காணுமா என்பது போன்ற எதிர்பார்ப்புகளும் தொண்டர்களிடையே எழுந்துள்ளன.

Nanthini

Recent Posts

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

14 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

18 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

44 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

1 மணத்தியாலம் ago