“நீங்களா? நானா?.. விஜய்க்கு பொன்ராஜ் விடுத்த பகிரங்க சவால்”… தமிழக அரசியலில் பற்றி எரியும் மோதல்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பெண் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களைச் சமூக வலைதளங்களில் மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்ததாக, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் உதவியாளரும் அரசியல் விமர்சகருமான பொன்ராஜ் மீது தவெக தலைவர் விஜய் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட விஜய், திமுக அரசு இத்தகைய நபர்களை அரவணைத்துச் செல்வதாகவும், வரும் தேர்தலில் “தாய்க்குலத்தின்” தீர்ப்பால் திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி என்றும் மிகக் காட்டமாகத் தன் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.

விஜய்யின் இந்த நேரடிப் புகாருக்குப் பதில் அளிக்கும் வகையில் பொன்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்த மோதலை அடுத்த கட்டத்திற்குத் தள்ளியுள்ளது. விஜய்யை நோக்கி “ஆதாய சூதாடி நீங்களா அல்லது நானா?” என்ற கேள்வியுடன் தொடங்கிய பொன்ராஜ், பொதுவெளியில் விஜய்க்காகப் பெண்கள் பேசும் சில கருத்துகளைச் சுட்டிக்காட்டி, அத்தகைய கலாச்சாரச் சீர்கேடுகளைத் திருத்தாமல் விஜய் ரசித்துக் கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு மாணவி பேசிய சர்ச்சை கருத்து முதல், திருமணமான பெண்கள் விஜய்யை உயர்த்திப் பேசியது வரை அனைத்தையும் பட்டியலிட்டு பொன்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து தனக்கும் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும், வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகத் தரக்குறைவான வசவுகள் அள்ளி வீசப்படுவதாகவும் பொன்ராஜ் புகார் தெரிவித்துள்ளார். இது போன்ற “விர்ச்சுவல் வாரியர்களை” (Virtual Warriors) வைத்து மிரட்டுவது இழிவான அரசியல் என்றும், அரசியலில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லத் திராணியற்றவர்களே இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் விஜய்யைச் சாடியுள்ளார்.

பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் தமக்கு இல்லை என்று குறிப்பிட்ட பொன்ராஜ், விஜய்யை நோக்கிச் சில கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். விஜய்க்காக உயிர்நீத்த மற்றும் காயம்பட்ட இளைஞர்களின் குடும்பப் பெண்களிடமும், தவெக கட்சியில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகக் கூறப்படும் பெண்களிடமும் விஜய் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு விஜய் மன்னிப்பு கேட்டால் மட்டுமே, தனது சொல்லால் காயப்பட்ட பெண்களிடம் தான் மன்னிப்பு கேட்கத் தயார் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் பொன்ராஜ் ஆதரவாளர்களுக்கு இடையேயான கருத்துப் போராக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் பெண்களைக் கேவலமாகச் சித்தரித்த பொன்ராஜுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மறுபுறம் விஜய் மீது பொன்ராஜ் வைத்துள்ள அடுக்கடுக்கான கேள்விகள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. சட்ட ரீதியான நடவடிக்கைகளும், அரசியல் ரீதியான விமர்சனங்களும் ஒருசேரப் பாயத் தொடங்கியுள்ளதால், தமிழக அரசியலில் ‘தவெக vs பொன்ராஜ்’ மோதல் தணியாமல் புகைந்து கொண்டிருக்கிறது.

Nanthini

Recent Posts

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

17 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

21 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

47 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

1 மணத்தியாலம் ago