பக்காவா பிளான், ஸ்கெட்ச் போட்டு விஜய்யை தூக்கிருக்காங்க… இத செஞ்சது ஒரு முன்னாள் மந்திரி… பரபரப்பை கிளப்பிய பிரேமலதா…!

Spread the love

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகிறது. அதேசமயம் இந்த சம்பவத்தில் விஜய்க்கு எதிராகவும் சாதகமாகவும் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதன்படி கரூர் சம்பவம் குறித்து பேசி உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கரூர் துயர சம்பவத்தின் போது விஜய் செய்தது தவறு. கரூருக்கு குறித்த நேரத்திற்கு விஜய் செல்லவில்லை.

மக்கள் காத்து கிடக்கிறார்கள் என்ற பொறுப்பு இல்லாமல் கடமை உணர்வை தவறவிட்டுள்ளார். விஜயகாந்தை அண்ணன் என கூறும் விஜய், அவர் என்ன செய்தார் என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். அதேசமயம் கரூர் விஷயத்தில் விஜயை பக்காவாக பிளான் போட்டு ஸ்கெட்ச் போட்டு தூக்கி உள்ளனர். விஜய்யை விரும்பி பார்க்க வந்த கூட்டம் செருப்பு வீசி இருக்க வாய்ப்பு இல்லை. அதை செய்தது உள்ளூர் ரவுடிகள் என்றும் அவர்களை இயக்கியது ஒரு முன்னாள் மந்திரி என்றும் பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த உண்மைகள் ஒரு நாள் வெளிவரும் என பிரேமலதா கூறியுள்ள நிலையில் அவர் கூறியுள்ள இந்த கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: கனிமவளங்கள் கடத்தல்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…

2 மணத்தியாலங்கள் ago

பறவையே உஷார்… “இது வாலு இல்ல, மரண வில்லன்” – நெட்டிசன்களை அதிரவைத்த வைரல் வீடியோ… அம்மாடியோ பயங்கரமா இருக்கே..!!

ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…

2 மணத்தியாலங்கள் ago

இரத்தக் கடலாக மாறிய கடற்கரை.. பாரம்பரியம் என்ற பெயரில் 700 திமிங்கிலங்கள், டால்பின்கள் கொடூர வேட்டை… உலகையே உலுக்கிய கொடூரம்..!!

ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…

2 மணத்தியாலங்கள் ago

“இனி இப்படித்தான்” வங்கிகளில் கோல்டு லோன்… RBI வங்கியின் அதிரடி அறிவிப்பு..!

வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…

2 மணத்தியாலங்கள் ago

பாவம்..! நடுரோட்டுல அனாதையா நிக்குறாரு விஜயபாஸ்கர்..எங்கே போறதுன்னு தெரியாம… திமுக அமைச்சர் ரகுபதி உருக்கம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…

3 மணத்தியாலங்கள் ago

டிவி சேனல் தொடங்கும் முதல்வர் விஜய்… நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பில் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…

3 மணத்தியாலங்கள் ago