கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையின்போது அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். தமிழக அரசும் அறிவித்துள்ளது. தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக தலைவர் பிரேமலதா, “விஜய் கூட்டத்துக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு போடப்படவில்லை. பிரச்சாரத்திற்கு மிகவும் குறுகலான இடம் வழங்கப்பட்டதாலும், ஆம்புலன்ஸ் வந்ததாலும் தான் உயிரிழப்புகள் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.
