Connect with us

CINEMA

நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது.. அவருக்கு பதிலாக அவரது மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்ட தருணம்.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவரான கேப்டன் விஜயகாந்த்-க்கு நேற்று பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஜனாதிபதியிடம் இருந்து பத்மபூஷன் விருதை பெற்றார். தமிழ் சினிமாவில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த்.

   

முன்னணி நடிகராக பலம் வந்த விஜயகாந்த் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார். இவருடைய பல திரைப்படங்கள் 90 கிட்ஸ்-களின் பேவரட்டாக இன்றளவும் இருந்து வருகின்றது. அது மட்டுமில்லாமல் சினிமாவில் தனக்கு வழங்கும் உணவை கீழ் மட்டத்தில் இருக்கும் நடிகர்களும் சாப்பிட வேண்டும் என்று எண்ணி அதனை நிகழ்த்திக் காட்டியவர் விஜயகாந்த்.

சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த இவர் பின்னர் அரசியலுக்குள் நுழைந்தார். தேமுதிக என்னும் கட்சியை தொடங்கிய இவர் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்தார். பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

இவரின் உயிரிழப்பு தமிழக ரசிகர்களை மிகப்பெரிய அளவில் பாதித்தது. இவரது உடல் சென்னை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு இன்றும் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற விழாவில் இவருக்கு விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பட்டியலில் விஜயகாந்த் பெயர் இடம் பெறவில்லை.

இதைத்தொடர்ந்து இரண்டாவது கட்டமாக நேற்று டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஜனாதிபதியான திரௌபதி முர்மு பலருக்கும் விருதுகள் வழங்கினார். இந்த விழாவில் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய் பிரபாகரன் பங்கேற்று பத்மபூஷன் விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்தியாவில் மிகப்பெரிய மூன்றாவது விருது என்று அழைக்கப்படுவது பத்மபூஷன் விருது. இது மறைந்த நடிகர் விஜயகாந்த்க்கு வழங்கப்பட்டது மிகப்பெரிய பெருமை என்று பலரும் கூறி வருகிறார்கள். மறைந்தாலும் இவர் செய்த நன்மைகளும் புகழும் இன்றளவும் பேசப்பட்ட தான் வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Galatta Media (@galattadotcom)

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top