BREAKING: “நாங்களும் வரோம்”… திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரேமலதா… அரசியலில் அதிரடி டுவிஸ்ட்…!

By Nanthini on பங்குனி 23, 2026

Spread the love

புதுச்சேரி அரசியலில் நிலவி வரும் குழப்பங்களுக்கு இடையே, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக, அங்குள்ள 3 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அந்த 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் இன்று பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் இழுபறி நீடித்து வரும் நிலையில், இரு கட்சிகளும் 30 தொகுதிகளிலும் தனித்தனியாக வேட்புமனு தாக்கல் செய்து மல்லுக்கட்டி வருகின்றன; தற்போது தேமுதிகவின் இந்தத் திடீர் அதிரடி முடிவு, திமுக கூட்டணியின் ஒற்றுமையை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, அம்மாநில தேர்தல் களத்தில் ஒரு புதிய பரபரப்பைத் தொற்றியுள்ளது.