அடுத்த அதிரடி…. தமிழகத்தில் அனைத்து குடும்பத்திற்கும்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!

By Nanthini on பங்குனி 6, 2026

Spread the love

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதற்கட்ட பணிகள் வரும் ஜூலை 17-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை, அதாவது 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் அறிவித்துள்ளது. அரசின் நலத்திட்டங்களை முறையாகத் திட்டமிட்டு, தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த கணக்கெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.

இதற்காக, ஒவ்வொரு வீட்டின் சூழல், சொத்து விவரங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான 33 கேள்விகளை உள்ளடக்கிய விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத் தரவுகள் எதிர்கால சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமானவை என்பதால், பொதுமக்களும் வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்களிடம் சரியான தகவல்களைப் பகிர்ந்து, இம்முக்கியமான அரசுப் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.