திக் திக் திக்… லிவ்-இன் வாழ்க்கையில் நேர்ந்த கொடூரம்… 5 மாத கர்ப்பிணி காதலி பரிதாப சாவு… தப்பியோடிய காதலன்… பகீர் பிண்ணனி என்ன?…

By Swetha on ஐப்பசி 20, 2026

Spread the love

திருமணமாகி தலா இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஜோடி ஒன்று, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஒரே வீட்டில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்துள்ளது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு காரணமாகக் காதலி கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கொலை செய்யப்பட்ட பெண் தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் திடீர் கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

   

இதற்கிடையில், தலைமறைவாக உள்ள காதலனைப் பிடிக்கக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள், இக்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும், வேறு ஏதேனும் முன்விரோதம் உள்ளதா என்பது குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.