இன்ஸ்டாகிராம் பில்டர்களைப் பயன்படுத்தி தனது தோற்றத்தை மாற்றி, சாதுரியமாகப் பேசிய பிலாஸ்பூரைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண், ஐந்து ஆண்களைத் தனது வலையில் வீழ்த்தியுள்ளார். அவர்களிடம் பழகி, நெருக்கமாக இருந்த தருணங்களைப் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோக்களை வைத்தே அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் புதிய பாணி பிளாக்மெயில் (Blackmail) விளையாட்டைத் தொடங்கியுள்ளார்.
இவரது பிளாக்மெயில் செய்யும் முறை மிகவும் விசித்திரமானது. எந்த ஆணுடன் நெருக்கமாக இருந்தாரோ, அவரது பெயரில் ஒரு போலி இன்ஸ்டாகிராம் கணக்கை பிரீத்தி உருவாக்குவார். அதன் மூலம் அந்த ஆபாச வீடியோக்களைத் தனது சொந்த இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு அவரே அனுப்பிக் கொள்வார். அதன்பின், காவல் நிலையத்திற்குச் சென்று, “ஐயா, இந்த நபர் எனது ஆபாச வீடியோக்களை எனக்கு அனுப்பி என்னை மிரட்டுகிறார்” என்று அந்த ஆண்கள் மீது பொய்ப் புகார் அளிப்பார்.
இந்தப் புகாரை ஏற்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அந்தப் போலி இன்ஸ்டாகிராம் கணக்கின் ஐபி முகவரியை (IP Address) ஆய்வு செய்தபோது, அது புகாரளித்த அந்தப் பெண்ணின் சொந்த மொபைல் போன் என்பது அம்பலமானது. இதனால் ஆட்டம் தலைகீழாக மாறி, மற்றவர்களை மிரட்டிய குற்றத்திற்காக அந்தப் பெண் மீதே போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தற்போது அவரைச் சிறையில் அடைத்துள்ளனர்.
