ஆசை காட்டி மோசம் பண்ணிட்டீங்களே.. கார்த்தி படத்தால் அப்சட் ஆன ‘ஈரமான ரோஜாவே’ சீரியல் நடிகை..

By Ranjith Kumar

Updated on:

இயக்குனர் சி.பிரேம் குமார் அவர்களின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 96, இந்த திரைப்படம் காதல் செய்யாதவர்கள் மனதில் கூட ஈரங்களை சுரக்கும் அளவிற்கு இப்படம் பட்டி தொட்டி எல்லாம் பேசப்பட்டது, இதுவரை யாரும் கண்டிராத அளவு விஜய் சேதுபதியின் காதலின் உள்ளார்ந்த ஒரு நடிப்பை இப்படம் காட்டியுள்ளது, நீண்ட நாள் பிறகு காதலின் ராணி ஆன த்ரிஷாவின் அழகான நடிப்பை வெளிக்கொண்டு வந்த படமும் இதுதான்,

preamkumar

இப்படம் தமிழில் மிகப்பெரிய பிளாக் பஸ்டராக அடித்து வெறித்தனமாக ஓடி இந்தியா முழுவதும் திரும்பி பார்க்க வைத்தது, இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அனைத்து சினிமா துறையிலும் வந்து நான் நீ போட்டு போட்டி போட்டு இப்படத்தின் இயக்குநரை அணுகினார்கள், அதன்பின் தெலுகு கன்னடம் போன்ற பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது, அந்தந்த மொழிகளில் மிகச் சிறப்பாக ஓடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டது.

   
pream karthi

தற்போது இயக்குனர் பிரேம்குமார் கார்த்தியுடன் இணைந்து படம் பண்ணிக் கொண்டிருக்கிறார், இவர்கள் இரண்டு பேரும் இணைந்ததை கண்டு மக்கள் மக்கள் அனைவரும் எப்பொழுது இப்படம் திரைக்கு வரப்போகிறது என்று ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் பேரிடப்படாத இப்படத்தில் அரவிந்த்சாமி போன்ற பிரபலங்கள் நடித்த வருகிறார்கள், சமீபத்தில் பிரேம் குமார் அவர்கள் இப்படத்தில் எந்த ஹீரோயினும் இல்லை, ஹீரோயின்க்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தால் இப்படத்தில் வைக்கப்படவில்லை என்று சொல்லினார். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்ததற்கு பின்னால் இப்ப இப்படத்தில் தெலுங்கு சீரியல் நடிகை சுவாதி கொண்டே ஹீரோயினாக இருக்கிறார் என்று அறிமுகமானார்,

pream karthi

ஆனால் அதன் பின்னும் இப்பொழுது சில வருடங்களாக யார் கண்ணிலும் படாமல், எந்த படமும் பண்ணாமல் இருந்த ரசிகர்களின் முன்னாள் கனவு கன்னியான ஸ்ரீதிவ்யா அவர்கள் இப்படத்தில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இயக்குனர் ஹீரோயினை சேர்க்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இரண்டு ஹீரோயின்களை சேர்த்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத கதையில் இரண்டு ஹீரோயினுக்கு எப்படித்தான் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனாலும் இப்படம் மிக எதிர்பார்ப்பு மிக்கதாக இருப்பதால் இது திரைக்கு வந்தால் தான் தெரியும் அவர்களின் கதாபாத்திரத்தின் ஆலம்.

author avatar
Ranjith Kumar