செகண்ட் இன்னிங்ஸில் கம்பேக் கொடுத்தாரா பிரஷாந்த்..? அந்தகன் பட முழு விமர்சனம் இதோ..!!

By admin on ஆவணி 9, 2024

Spread the love

90ஸ் காலகட்டத்தில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பிரசாந்த் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து ஜீன்ஸ், வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித்தை காட்டிலும் பிரசாந்த் நடிக்கும் படங்களுக்கு வரவேற்பு அதிகம். ஆனால் அடுத்தடுத்து சினிமாவில் சறுக்கல்களை சந்தித்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் GOAT திரைப்படத்திலும் பிரசாந்த் நடித்துள்ளார்.

   

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படம் மூலம் மீண்டும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார் கடந்த 2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் அந்தாதூன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, வனிதா, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2022 ஆம் ஆண்டு முடிவடைந்தது.

   

 

ஆனால் ஒரு சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்று அந்தகன் படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது. பார்வையற்றவராக இருக்கும் பிரசாந்த் எப்படியாவது லண்டன் சென்று பியானோ கலைஞராக வேண்டும் என ஆசைப்படுகிறார். இதற்கிடையே பிரசாந்துக்கு காதலி கிடைக்கிறார். காதலி வந்த பிறகு வாழ்வில் நடக்கக்கூடிய அடுத்தடுத்த சம்பவங்களை படத்தில் விறுவிறுப்பாக காட்டியுள்ளனர்.

இதுவரை படம் பார்த்த பலரும் அந்தகன் படம் சூப்பராக இருக்கிறது என கூறியுள்ளனர். சென்டிமென்ட், ஆக்சன் காட்சிகள் நிறைந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அந்தகன் திரைப்படம் உள்ளது. பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆகி சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் ஆகிய மூன்று விருதுகளையும் அந்தாதூன் திரைப்படம் தட்டி தூக்கியது. அப்படி இருக்க தமிழில் அந்தகன் திரைப்படம் பிரசாந்த்துக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

#image_title