90ஸ் காலகட்டத்தில் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் பிரசாந்த். வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக பிரசாந்த் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து ஜீன்ஸ், வின்னர் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். ஒரு காலகட்டத்தில் விஜய், அஜித்தை காட்டிலும் பிரசாந்த் நடிக்கும் படங்களுக்கு வரவேற்பு அதிகம். ஆனால் அடுத்தடுத்து சினிமாவில் சறுக்கல்களை சந்தித்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகும் GOAT திரைப்படத்திலும் பிரசாந்த் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் திரைப்படம் மூலம் மீண்டும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார் கடந்த 2018-ஆம் ஆண்டு ஹிந்தியில் அந்தாதூன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் ஆனது. அந்த படத்தை தமிழில் அந்தகன் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார். மேலும் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி, யோகி பாபு, வனிதா, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2022 ஆம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று அந்தகன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் ரோகிணி தியேட்டருக்கு நடிகர் பிரசாத் மற்றும் படக்குழுவினர் படம் பார்க்க சென்றனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. மேலும் ரசிகர்கள் அந்தகன் படத்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தனர். தியேட்டர் வாசலில் ஆயிரம் வாலா வெடி வெடித்து கொண்டாடினர். முதல் நாள் அந்தகன் திரைப்படம் இந்தியா முழுவதும் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்தது. ஆனால் படக் குழுவினர் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கூறப்படவில்லை. வாரத்தின் இறுதி நாட்களாக இன்றும், நாளையும் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

