#image_title
டாப் ஸ்டார் பிரசாந்த் நடிப்பில் நேற்று அந்தகன் திரைப்படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். முதல் நாளில் அந்தகன் திரைப்படம் 50 லட்சம் வரை இந்திய அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்திலும் பிரசாந்த் நடித்துள்ளார்.
கோட் திரைப்படத்தில் விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்த் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த அந்தகன் படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதே போல கோட் திரைப்படமும் பிரசாந்தின் சினிமா வாழ்க்கையில் நல்ல திருப்புமுனையாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பிரசாந்துக்கு 51 வயது ஆகிறது.
ஆனாலும் இளம் ஹீரோவை போல பிட்டாக இருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் அந்தகன் மற்றும் கோட் திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களிலும் பிரசாந்த் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த நிலையில் தனது பயோபிக்கை எடுத்தால் தானே அதில் நடிப்பேன் என பிரசாந்த் ஏற்கனவே கூறியுள்ளார். மேலும் அந்த படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அல்லது நெல்சன் இருவரில் யாராவது ஒருவர் இயக்கினால் சிறப்பாக இருக்கும் என சமீபத்தில் பிரசாந்த் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதேபோல நெல்சனும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க உள்ளார். நெல்சன் அல்லது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரசாந்த் நடித்தால் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…
தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…
விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…
டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…
பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…