Categories: சினிமா

பிரசாந்த் பட டைட்டிலை அனுமதியின்றி எடுத்துக் கொண்டு அல்வா கொடுத்த படக்குழு…கேஸ் போடக் கூட வழியில்லாமல் தவிக்கும் தயாரிப்பாளர்!

Spread the love

நாளை கவின் நடிப்பில் இளன் இயக்கியுள்ள ஸ்டார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டைட்டில் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த டிரைலர் நல்ல கவனிப்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் இளன் தன்னுடைய தந்தையின் வாழ்க்கைப் போராட்டத்தைதான் சில மாறுதல்களோடு இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இளனின் அப்பா தன்னுடைய 55 ஆவது வயதில்தான் தன்னுடைய முதல் நடிப்பு வாய்ப்பைப் பெற்றார். அதை தான் ஒரு சினிமாவில் நடிக்க ஆசைப்படும் இளைஞனின் வாழ்க்கையை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் பற்றி சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ஸ்டார் என்ற தலைப்பில் பிரசாந்த், ஜோதிகா, ரகுவரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் 2001 ஆம் ஆண்டு ஒரு படம் ரிலீஸானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பாடல்கள் ஹிட்டாகின. இன்றளவும் கேட்கப்படும் சூப்பர்ஹிட் பாடல்களாக உள்ளன.

இந்நிலையில் ஸ்டார் படத்தின் தயாரிப்பாளரான விஜய்கிருஷ்ணா என்பவருக்கு தற்போது அதே டைட்டிலை பயன்படுத்தியுள்ள தயாரிப்பாளர்கள் எந்தவொரு தொகையும் தரவில்லை என்று சொல்லப்படுகிறது. நலிந்து போன தயாரிப்பாளராக உள்ள அவர் தன் டைட்டிலைப் பயன்படுத்தியதற்கு எதாவது ஒரு குறைந்த பட்ச தொகையாவது எதிர்பார்க்கிறாராம்.

இது சம்மந்தமாக வழக்குக் கூட தொடுக்க முடியாத பொருளாதார சூழல் இல்லையாம். அதனால் எதாவது ஒரு தொகை கிடைத்தால் தனக்கு உதவியாக இருக்கும் என புலம்பியுள்ளாராம். இதை சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு ஒரு வீடியோ மூலமாக பேசி கவனம் ஈர்த்துள்ளார்.

இதே போல தற்போது ரஜினி படத்துக்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டது. அதே பெயரில் சில 30 ஆண்டுகளுக்கு  முன்னர் சரத்குமார் நடிப்பில் ஒரு படம் வந்தது. அதை மாணிக்கம் நாராயணன் தயாரித்திருந்தார். இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவரிடம் முறையாக பேசி அவருக்கு ஒரு தொகையைக் கொடுத்து அந்த தலைப்பை வாங்கிக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

vinoth

Recent Posts

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

2 minutes ago

“விஜய் யாருடைய ஓட்டைப் பிரிப்பார்?”… அதிமுக, திமுக-வுக்கு செக் வைத்த பூங்குன்றன்… 2026-ல் நடக்கப்போகும் அந்த ‘அமைதியான புரட்சி’ இதுதான்…!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…

4 minutes ago

“டிகிரி, டிப்ளமோ முடித்தவரா நீங்க… RCFL-ல் காத்திருக்கும் நவரத்னா வேலை… மாதம் ₹60,000 வரை சம்பளம்.. 188 காலிப்பணியிடங்கள்… ஏப்ரல் 27-க்குள் அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…

5 minutes ago

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

9 minutes ago

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

16 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

20 minutes ago