சமூகத்தில் நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரிய சடங்குகள் இன்றும் உயிருடன் தான் வாழ்ந்து வருகின்றன என்பதை உணர்த்தும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருமணம் மற்றும் பூஜை நிகழ்வுகளுக்கு முன்பு ஆண், பெண் வேட மாற்றம் செய்வது போன்ற கலாச்சார மரபுகள், காலம் எவ்வளவு மாறினாலும் அதனை அழியாமல் தலைமுறைகளாக பாதுகாக்கப்படுகின்றன. ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு மணமகன் – மணமகள் உடைகளை மாற்றிக்கொண்டு தங்களுடைய இஷ்ட தெய்வத்தை வழிபடுவது பாரம்பரியமாக இருந்து வருகின்றது.
இதில் மணமகன் பெண் வேடத்திலும், மணமகள் ஆண் வேதத்திலும் இருப்பது சிறப்பு. உடைகளை மாற்றிய மணமகன் திருமண ஊர்வலத்தை வழிநடத்தி பிறகு குடும்ப தெய்வத்தை வணங்குகின்றார். பூஜை முடிந்ததும் இருவரும் தங்களுடைய இயல்பான மணமக்கள் உடையில் மாறி திருமண நிகழ்வு நடைபெறுகின்றது. பல தலைமுறைகளாக இதை கடைபிடித்து வருவதோடு நவீன காலத்திலும் அதே மரியாதையுடன் தொடர்கிறோம் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். தற்போது அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த விழா மிகுந்த சடங்குகளுடன் கொண்டாடப்படுகின்றது.
