பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான 23-வது தவணைத் தொகை ஜூன்-ஜூலை 2026 ஆகிய மாதங்களில் வங்கிக் கணக்கில் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் மூன்று தவணைகளாக (தலா 2,000 ரூபாய்) வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரவிருக்கும் 23-வது தவணைக்கான 2,000 ரூபாயைத் தடையின்றிப் பெறுவதற்கு இ-கேஒய்சி மற்றும் நில ஆவணச் சரிபார்ப்பு ஆகிய இரண்டையும் நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் இ-கேஒய்சியை எளிய முறையில் நிறைவு செய்யப் பல்வேறு வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, தங்களின் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மூலமாக ஆன்லைனிலேயே சரிபார்ப்பை மேற்கொள்ளலாம். இணைய வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள பொதுச் சேவை மையங்களுக்குச் சென்று தங்களின் கைரேகை பயோமெட்ரிக் முறை மூலமாகவோ அல்லது பிஎம் கிசான் மொபைல் செயலி வழியே முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியோ தங்களது இ-கேஒய்சியை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
தமிழக பாஜகவில் இணைந்த பிறகு தமக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படாதது குறித்து, "எனக்குத்தான் பாஜகவில் எந்தக் கட்சிப் பதவியும் இல்லையே"…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் கெர்லி பகுதிக்கு உட்பட்ட டான்டியா கிராமத்தில், 28 வயது தாய் ஒருவர் தனது மூன்று…
முதல்வர் விஜய்யைத் தரக்குறைவாகப் பேசிய வழக்கில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்குக் காவல்துறை முறைப்படி சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் கடந்த…
டெல்லி மஹிபால்பூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை-48-ஐ ஒட்டிய சேவைச் சாலையில், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்த அமெரிக்கப் பெண் ஒருவர்…
புத்தூரில் உள்ள ஒரு விடுதியில் அக்டோபர் 17 அன்று இரவு பணியில் இருந்த 27 வயதான முகமது ரிஃபாய் என்ற…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கருமாங்கழனி கிராமத்தில் வசித்து வந்த ஜார்க்கண்ட் தம்பதியான விஸ்வநாத் - கல்பனாவுக்கு, பெஸ்டி…