Connect with us

சூடுபிடிக்கும் பிரதீப் Red card விவகாரம்… தில்லாலங்கடி வேலை பார்த்த பூர்ணிமா… பிரதீப் வெளியிட்ட ட்விட்டர் பதிவு (வீடியோ) வைரல்…

CINEMA

சூடுபிடிக்கும் பிரதீப் Red card விவகாரம்… தில்லாலங்கடி வேலை பார்த்த பூர்ணிமா… பிரதீப் வெளியிட்ட ட்விட்டர் பதிவு (வீடியோ) வைரல்…

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, தற்போது ஏழாவது சீசன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் களமிறங்கினர். இவர்களில் 5 போட்டியாளர்கள் வெளியேறி இருக்க, 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்தனர். எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு முற்றிலும் வித்தியாசமாக இந்த சீசன் அமைந்துள்ளது.

   

பிக் பாஸ் வீடாக இரண்டாக பிரிந்ததிலிருந்ததே டாஸ்க் விளையாட்டிலும் பல புதுமைகள் இருந்து வருகிறது. போட்டியாளர்கள் தனித்தனியாக பிரிந்து விளையாடாமல் கூட்டம் கூட்டமாக சேர்ந்து ஒவ்வொருவராக தோற்கடித்து வருகின்றனர்.  எவிக்ஷன் லிஸ்டில் இருந்த பிரதீப் தான் அங்கிருந்த ஹவுஸ்மேட்கலால் டார்கெட் செய்யப்பட்டார். ஜோதிகா ,பூர்ணிமா, மாயா, ரவீனா என பல பெண் போட்டியாளர்கள் அவருக்கு எதிராக ரெட் கார்ட் கொடுக்க வலியுறுத்தினார்கள். அது மட்டுமின்றி பல ஆண் போட்டியாளர்களும் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்க கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற கெட்ட பெயருடன் பிக் பாஸ் வீட்டை விட்டு  ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஆனால் நெட்டிசன்களால் இந்த முடிவு ஏற்கப்படவில்லை. அவருக்கு ஆதரவாக தற்போது வரை இணையத்தில் பல்வேறு பதிவுகளும் கமாண்டுகளும் வெளியாகி வருகிறது. இந்நிலையில்  பல முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் நன்றி கூறும் விதமாக தனது X தள பக்கத்தில் வடிவேலு காமெடி ஒன்றை வைத்து நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் பிரதீப். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பிரதீப் அந்த ரெட் கார்டை வைத்து சுற்றி பெண்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் தான் பூர்ணிமாவை தவறாக பேசவில்லை என்றும், அந்த இடத்தில் நடந்த அந்த விஷயத்துக்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். பிரதீப்பிடம் சரி சரி என தலையாட்டிவிட்டு பூர்ணிமா கமலஹாசன் முன்னிலையில் பிரதீப்பை நன்றாக மாட்டிவிட்டு விட்டுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் பொழுது பிரதீப்பின் மீது எந்த தவறும் இல்லை என்பது நமக்கு தெள்ள தெளிவாக தெரிகிறது. இதோ அந்த பதிவு…

Continue Reading
To Top