நான்கே நாளில் இத்தனை கோடி வசூலா?… தனுஷின் NEEK படத்தை மொத்தமாக கவிழ்த்த பிரதீப் ரங்கநாதனின் டிராகன்…!

By Nanthini on மாசி 25, 2025

Spread the love

இதனிடையே யாரடி நீ மோகினி மற்றும் திருவிளையாடல் ஆரம்பமாகிய திரைப்படங்களில் தனுஷை பார்த்தது போல அச்சு பிசறாமல் அப்படியே மற்றொரு ஜெராக்ஸ் ஆக வந்துள்ள நடிகர் தான் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே திரைப்படம் மூலமாக திரையுலகில் நடிகராக அறிமுகமான பிரதிப் ரங்கநாதன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். கதையைத் தாண்டி தன்னுடைய நடிப்பை பாராட்ட வைக்கும் அளவுக்கு பிரதீப் ரங்கநாதன் மொத்த உடலையும் நடிக்க வைத்திருப்பது தான் படம் பிரம்மாண்ட வெற்றி அடைய முக்கிய காரணம் என்கின்றனர். இவர் இறுதியாக டிராகன் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

3 நாட்களில் டிராகன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

   

தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை விட வசூலில் 10 மடங்கு அதிகமாக நான்கு நாட்களில் டிராகன் திரைப்படம் வசூலித்துள்ளது. முதல் மூன்று நாட்களில் டிராகன் திரைப்படம் 50 கோடி வசூலை கடந்து மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்து விட்டதாக அர்ச்சனா கல்பாத்தி பதிவிட்டுள்ளார். நேற்றைய தினம் படத்தின் வசூல் நன்றாகவே இருந்த நிலையில் இந்திய அளவில் 5.5 கோடி ரூபாய் வசூலை டிராகன் திரைப்படம் நான்காவது நாளில் வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

   

தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' முதல் சிங்கிள் ஆக.30-ல்  ரிலீஸ்! | dhanush directorial Nilavuku En Mel Ennadi Kobam movie first  single announced - hindutamil.in

 

இதுவரை மொத்தமாக இந்திய அளவில் 36 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் உலக அளவில் 56 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் நேற்று வெறும் 46 லட்சம் மட்டுமே வசூல் செய்த நிலையில் இதுவரை இந்திய அளவில் இந்த திரைப்படம் ஐந்து கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Dragon Vs NEEK: Unbelievable Result for Dhanush?

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 5 கோடி ரூபாய் வசூலையும் டிராகன் திரைப்படம் 56 கோடி ரூபாய் வசூலையும் ஈட்டி உள்ள நிலையில் 10 மடங்கு அதிக வசூலை பிரதீப் ரங்கநாதன் திரைப்படம் அல்லி தனுஷ் திரைப்படத்தை பாக்ஸ் ஆபீஸில் ரொம்பவே வீக் ஆகி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல்கள் குவிந்து வருகின்றன. இதன் மூலமாக டிராகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அடுத்த வாரத்திற்குள் 100 கோடி ரூபாய் போஸ்டரை வெளியிடுவது உறுதி எனவும் கூறுகின்றனர்.