போலீசுடன் கெத்தாக வராரே.. BB-க்கு பிறகு முதல் முறையாக முக்கியமான விழாவுக்கு வந்த பிரதீப் ஆண்டனி.. வைரலாகும் வீடியோ..

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது ஒளிபரப்பாகி நிறைவடைந்தது. பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் களமிறங்கிய 23 போட்டியாளர்களில்  முக்கிய போட்டிகளில் ஒருவராக பார்க்கப்பட்டவர் பிரதீப் ஆண்டனி. இவர் நடிகர் கவினின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

   

இந்த  பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனிக்கு  ‘பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை ‘ என்ற அவ பெயருடன் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதற்கு முக்கிய காரணம் மாயாவும் அவருடன் இருந்தவர்களும் தான் இவர்கள் பிளான் போட்டு பிரதிப் ஆண்டனியை வெளியேற்றினர்.

கமலஹாசனும் ஒருதலை பட்சமாக செயல்பட்டு , தீர விசாரிக்காமல்  ரெட் கேட் கொடுத்து அவரை வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து கமலஹாசனுக்கு எதிராக சோசியல் மீடியாவில் கண்டனங்கள் எழுந்தது. டைட்டில் வென்றிருந்தால் கூட பிரதீப் ஆண்டனி இவ்வளவு பிரபலமாகி இருக்க மாட்டார். அந்த அளவிற்கு தற்பொழுது அவருக்கு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இதுதொடர்பாக தற்பொழுது வரை அவர் எந்த பேட்டியும் அளிக்கவில்லை. இந்நிலையில் முதன்முறையாக பள்ளி ஆண்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார் பிரதீப் ஆண்டனி. அதில் பிரதீப்புக்கு ராஜ மரியாதை கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் உடன் பிரதீப் கெத்தாக நடந்து வரும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி அவருக்கு சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசு வழங்கியும் கவுரவித்து உள்ளனர். தற்பொழுது இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.  இதோ வீடியோ…