பொதுவாகவே சினிமா துறையில் ஒன்றாக வேலை செய்பவர்கள் காதலித்து திருமணம் செய்வது வழக்கம் தான். அப்படி திருமணம் செய்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக பயணிக்கிறார்கள். ஒரு சிலர் கருத்து வேறுபாடு காரணமாக பாதியிலேயே விவாகரத்து பெற்ற பிரிந்து விடுகின்றனர். அந்த வரிசையில் நடிகர் பிரபுதேவாவும் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்திருந்தார். ஆரம்பத்தில் குரூப் டான்ஸராக இருந்து அதன் பிறகு டான்ஸ் மாஸ்டராகவும், நடிகர் மற்றும் இயக்குனர் என பல முகங்களை கொண்ட பிரபுதேவா தன்னுடன் குரூப் டான்ஸராக இருந்த ரமலத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.

இதில் மூத்த மகன் 15 வருடங்களுக்கு முன்பே உடல் நல குறைவால் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு இரண்டு மகன்களையும் பிரபு தேவா பாதுகாத்து வளர்த்து வருகின்றார். இதனிடையே வில்லு திரைப்படத்தை பிரபு தேவா இயக்கிய போது அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவோடு காதல் ஏற்பட்டது. அப்போது நயன்தாரா தன்னுடைய கையில் பிரபு தேவாவின் பெயரை டாட்டு போட்டு இருந்தார். இது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் பல நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். அந்த நேரத்தில் பிரபுதேவா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து இருந்தார். பிறகு சில வருடங்களிலேயே நயன்தாராவோடு பிரச்சனை ஏற்பட அவர் பிரிந்து விட்டார்.

அதன் பிறகு பிரபுதேவா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த பெண்ணுக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. அதே சமயம் சமீபத்தில் தனது கான்செர்ட்டில் மகனை பிரபுதேவா அறிமுகம் செய்தார். இந்நிலையில் பிரபு தேவாவின் முதல் மனைவி ரமலத் சமீபத்தில் அளித்த பேட்டியில், பிரபுதேவாவுக்கு நாடகம் தான் உயிர். அவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்பதில் அனைவருக்கும் பெருமை என்பதை விட எனக்கு பெருமை என்பது வேறு விஷயம். அதே சமயம் அது குறித்த பெரிய பெருமை எதுவும் எனக்கு கிடையாது. அவர் என்றால் எனக்கு எப்பவுமே மிகவும் பிடிக்கும். அவருக்கும் அப்படித்தான் என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். இதுதான் எனக்கு மிகப்பெரிய விஷயமாக தெரிகிறது.

அவர் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்பதை தாண்டி அவர்தான் என்னுடைய கணவர், லவ்வர், முக்கியமா அவர் என்னுடைய பசங்களுக்கு அப்பா என்பது தான் எனக்கு மிகப்பெரிய விஷயமாக தெரிகிறது. நான் ஏன் அதிகமாக வெளியில் வரமாட்டேன் என்று கேட்கிறார்கள். நான் வெளியே வர வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. அவர் திருமணமான பிறகு என்னை ஒரு ராணி மாதிரி தான் பார்த்துக் கொண்டார். இவங்க கிட்ட ஏன் பேசின அவங்க கிட்ட ஏன் பேசின என்று ஒன்றுமே அவர் என்னிடம் சொன்னது கிடையாது. பிரபுதேவாவை பார்த்தாலே பலருக்கும் பிடித்து போய்விடும். அந்த மாதிரி ஒரு ஆள் தான் அவர்.

எங்களுக்குள் விவாகரத்து ஆன பிறகும் அவர் என்னுடன் ஒரு நட்பாக பேசிக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நான் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். பெரும்பாலும் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தான் பணியாற்றியுள்ளேன். என் அப்பா மற்றும் தாத்தா சினிமாவில் இருந்தாலும் நானே தனியாக ஒரு சினிமாவின் மீது ஆசை கொண்டு நடனத்தை கற்றுக் கொண்டுதான் சினிமாவில் நுழைந்தேன். எனக்கு நடனம் என்றால் அந்த அளவிற்கு விருப்பம் என்று பிரபுதேவாவின் முதல் மனைவி அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
