6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

By Mahalakshmi on ஆடி 3, 2024

Spread the love

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது.

பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் கல்கி 2898 AD. இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.  மறைந்த நடிகர் சாவித்திரியின் வாழ்க்கையை வரலாற்று படமாக எடுத்து தேசிய விருதை வென்ற இவர் தன் முதல் படத்திலேயே தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் .அதைத்தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு இவர் எடுத்த திரைப்படம் தான் கல்கி.

   

   

இந்த திரைப்படத்தின் மூலமாக புகழின் உச்சிக்கே சென்று விட்டார் என்று தான் கூற வேண்டும். இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க அவருடன் திஷா பதானி, தீபிகா படுகோன், கமலஹாசன், அமிதாபச்சன், பசுபதி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கின்றது. பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கின்றார்.

 

இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்து பாசிட்டிவான விமர்சனங்களை செய்து வரும் நிலையில் தொடர்ந்து வசூலையும் அள்ளிக் குவித்து வருகின்றது. தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வசூலையும் முறியடித்து விட்டது. இப்படம் வெளியாகி ஆறு நாட்களான நிலையில் நேற்றைய தினம் இப்படம் உலகம் முழுவதும் 55 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் கல்கி திரைப்படம் தற்போது வரை 680 கோடி ரூபாய் வசூல் செய்தது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயலலிதா திரைப்படம் உலகம் முழுவதும் 650 கோடி வசூல் செய்த நிலையில் அந்த வசூலை 6 நாட்களில் பிரபாஸின் கல்கி திரைப்படம் முறியடித்து இருக்கின்றது.

இந்த திரைப்படம் கட்டாயம் 1000 கோடி வசூல் செய்யும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இப்படம் இதுவரை வட இந்தியாவில் மட்டும் 150 கோடி வரை வசூல் செய்துள்ளது, பாகுபலி படத்திற்கு பிறகு பெரிய அளவில் எந்த திரைப்படத்திலும் வரவேற்பு பெறாத பிரபாஸ் இந்த திரைப்படத்தின் மூலமாக மீண்டும் புகழின் உச்சிக்கு சென்று விட்டார்.