Connect with us

லியோ, KGF சாதனையை முறியடித்த கல்கி 2898 AD.. முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த பிரபாஸ்..!

CINEMA

லியோ, KGF சாதனையை முறியடித்த கல்கி 2898 AD.. முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸை பதம் பார்த்த பிரபாஸ்..!

 

நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள கல்கி திரைப்படம் ஒரே நாளில் உலக அளவில் 180 கோடி வசூல் செய்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் மிகப் பிரபலம் நடிகராக வலம் வந்தவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சாஹே, ராதே ஷியாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட அடுத்தடுத்த திரைப்படங்கள் அவருக்கு தொடர்ந்து தோல்வியை கொடுத்த நிலையில் ஒரு வெற்றி படத்திற்காக காத்திருந்தார். பிரபாஸ் அவர்களின் கடைசியாக வெளிவந்த சலாம் திரைப்படமும் சுமாரான வெற்றியை கொடுத்திருந்தது.

   

இந்நிலையில் எப்போது பாகுபலி போன்ற வெற்றியை கொடுப்பார் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியான திரைப்படம் தான் கல்கி 2898 AD.  நாக் அஸ்வின் இயக்கத்தில் பேண்டஸி திரைப்படமாக உருவான இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது.

மேலும் இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து தீபிகா படுகோன், அமிதாப்பச்சன், கமலஹாசன் உள்ளிட்ட  மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாகி இருந்தது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படத்தை காண மக்கள் மிகுந்த ஆவலுடன் திரையரங்குக்கு சென்று வந்தார்கள்.

படம் முதல் பாதி சற்று ஸ்லோவாக இருந்ததாக கூறும் ரசிகர்கள் இரண்டாவது பாதியில் மிக சூப்பராக இருந்தது என்று விமர்சனங்களை கூறி வருகிறார்கள். தொடர்ந்து இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி இருக்கின்றது. முதல் நாளிலேயே உலக அளவில் 180 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்தியாவில் மட்டும் 95 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

கல்கி 2828 ஏ டி திரைப்படம் எப்படியும் ஆயிரம் கோடி வரை வசூல் செய்யும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த திரைப்படம் முதல்நாளில் அதிக வசூல் அள்ளிய இந்திய திரைப்பட பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றது. முன்னதாக ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் 223 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. பாகுபலி 2 திரைப்படம் 217 கோடி வசூலுடன் 2-வது இடத்தில் இருக்கின்றது . அதைத் தொடர்ந்து பிரபாஸின் சலாம் திரைப்படம் 158 கோடியும், விஜயின் லியோ திரைப்படம் 142 கோடியும் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top