தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய்க்கு எதிராக பலரும் விமர்சித்து வந்தனர். இதனிடையே கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நீதிமன்றம் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட உள்ளது. இதற்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணை குழுவை அமைத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#KarurTragedy தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள திரு. பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில்… pic.twitter.com/KVNGUsex3P
— AIADMK – -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) October 13, 2025
இந்நிலையில் சிபிஐ விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்த பிரபாகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தன்னுடைய உயிருக்கு உத்தரவாதம் இல்லை. எனக்கும், என் தாயின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. எனவே, எனது தங்கை மற்றும் மைத்துனர் மரணத்திற்கு நீதி பெற்றுத் கொடுக்க வேண்டும். எனது அண்ணன் விஜய் தான் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
