மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் 2025 ஆம் ஆண்டுக்கான தொழில்பயிற்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேசிய அளவில் மொத்தமா 1149 பணியிடங்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 49 இடங்கள் உள்ளது. இதற்கு ஐஐடி, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பு தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.17,500, டிப்ளமோ தகுதி பெற்றவர்களுக்கு 15,000, ஐஐடி தகுதி பெற்றவர்களுக்கு 13,500 ரூபாய் உதவி தொகையாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வருகின்ற அக்டோபர் 6ம் தேதி வரை என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
