“நாங்க ஆட்சிக்கு வந்தா போலீஸ் ஸ்டேஷனே இருக்காது”…. பாஜக நிர்வாகி பகிரங்க மிரட்டல்…. அரசியலில் பரபரப்பு….!

Spread the love

அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும் மாநில செயற்குழு உறுப்பினருமான அய்யப்பன் பேசிய பேச்சு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், ஒரு கட்டத்தில் காவல்துறையினரையும் அரசு அதிகாரிகளையும் நேரடியாக மிரட்டும் தொனியில் பேசியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் பேசிய அய்யப்பன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். பெண்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாகக் கூறினார். ஆனால், இத்தகைய சூழலிலும் காவல்துறையினர் தங்களைப் போன்ற அரசியல் கட்சியினரிடம் மட்டும் அதிகாரத்தைக் காட்டுவதாக அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்னும் இரண்டு மாதங்களில் திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்றும், அதன் பிறகு அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும் கூறினார். அவ்வாறு தங்களது கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன், தா.பழூரில் காவல் நிலையமே இருக்காது என்றும், அங்குள்ள காவலர்களை ஒட்டுமொத்தமாகக் கலைத்துவிட்டு வெளியூருக்கு அனுப்பிவிடுவோம் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

அரசு அதிகாரிகளோ அல்லது காவல்துறையினரோ தங்களிடம் வீண் வைத்துக் கொள்ள வேண்டாம் என அவர் விடுத்த இந்த மிரட்டல், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில், பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அரசியல் பிரமுகர், பாதுகாப்பு அரணாக விளங்கும் காவல் நிலையத்தையே அகற்றுவோம் எனப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

நடுவழியில் உயிருக்கு துடித்த இளம்பெண்… டிரைவர், கண்டக்டர் செய்த ‘அந்த’ ஒரு காரியம்… புதுச்சேரியையே உருகவைத்த நெகிழ்ச்சி சம்பவம்… குவியம் பாராட்டுக்கள்…!

புதுச்சேரியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இளம்பெண்ணை, சமயோசிதமாகச் செயல்பட்டு அரசுப் பேருந்தையே ஆம்புலன்ஸாக…

2 minutes ago

“அமைச்சர் பதவிக்கு தகுதி இருக்கா?”… “அழுகினி நாடகம் ஆடுறாங்க”… தவெக அமைச்சரை வெளுத்து வாங்கிய திமுக… தூள் பறக்கும் ட்விட்டர் வார்…!

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்தே திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் நாளுக்கு நாள்…

14 minutes ago

அதிமுக காலி ஆகிறதா?… தவெக-வில் குவியும் மாஜிக்கள்… எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை…!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பல தசாப்தங்களாக தமிழக…

24 minutes ago

பனையூரில் குவிந்த முன்னாள் MLA-க்கள்… எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த ரவி மரியா… மொத்தமாக சரிந்த அதிமுக கூடாரம்….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…

25 minutes ago

BIG BREAKING: திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்… ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…

29 minutes ago

விஜய் ஆட்சியில் ஊழலா?…. ஆளுநரிடம் ஓடிச் சென்ற நயினார் நாகேந்திரன்… பதற்றத்தில் தவெக வட்டாரம்… விஜய்க்கு வந்த புதிய சிக்கல்….!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…

33 minutes ago