BREAKING: மே 4 வாக்கு எண்ணிக்கை… சற்றுமுன் தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு …!

By Nanthini on சித்திரை 27, 2026

Spread the love

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மே 4-ஆம் தேதி காலை 8 மணி முதல் 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது; இதில் தொடக்கமாக, 500 தபால் வாக்குகளுக்கு ஒரு மேசை என்ற அடிப்படையில் அவை எண்ணப்பட்டு, அடுத்த 30 நிமிடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் பொதுமக்களின் பங்களிப்பு வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ள நிலையில், மொத்தம் 2.35 கோடி (83.96%) ஆண்களும், 2.52 கோடி (86.20%) பெண்களும், மற்றும் 4,517 மூன்றாம் பாலினத்தவர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளதாக ஆணையம் அதிகாரப்பூர்வமாகத் தரவுகளைப் பகிர்ந்துள்ளது.