மிக குறைந்த முதலீடு…! வட்டி மட்டும் ரூ.2,00,000 மேல் கிடைக்கும்…. அள்ளி தரும் போஸ்ட் ஆபிஸின் அசத்தலான திட்டம்….!!

Spread the love

பாதுகாப்பான முதலீடு மூலம் உத்தரவாதமான மற்றும் நல்ல வருமானம் பெற விரும்புவோருக்கு, அஞ்சல் அலுவலக நேர வைப்புத் திட்டம் (Post Office Time Deposit Scheme – TD) ஒரு சிறந்த தேர்வாகும். இது அரசு ஆதரவு பெற்றிருப்பதால், இதில் முதலீடு செய்யப்படும் பணம் 100% பாதுகாப்பானது. இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் கால அவகாசத்தைத் தேர்வு செய்யலாம். இதில் 5 வருட காலத்திற்கு அதிகபட்சமாக 7.5% வட்டி விகிதம் கிடைக்கிறது.

உதாரணமாக, ஒருவர் 5 வருடத்திற்கு ரூ.5 லட்சத்தை டெபாசிட் செய்தால், அவருக்கு 7.5% வட்டி விகிதத்தில் முதிர்வு கால முடிவில் வட்டியாக மட்டுமே ரூ.2,24,974 கிடைக்கும். மொத்த முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும்.

இத்திட்டத்தில் சேர குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும், அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. ஒருவர் ஒற்றைக் கணக்கு அல்லது கூட்டுக் கணக்கு திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளும் இந்தக் கணக்கைத் திறக்க முடியும். மேலும், 5 வருட நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்வது பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளையும் வழங்குகிறது. உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தில் சில அடிப்படை ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.

Devi Ramu

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

1 மணத்தியாலம் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

2 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

2 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

2 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

4 மணத்தியாலங்கள் ago