பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்க பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளது. மக்கள் தங்களது விருப்பங்களை பொறுத்து போஸ்ட் ஆபீஸ் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் போஸ்ட் ஆபீசில் மாதாந்திர வருமான திட்டம் மூலம் முதலீட்டாளர்களுக்கு நிலையான வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளுக்கு நிலையான வருமானத்தை பெற முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு வட்டி விகிதமும் ஒரே மாதிரியாக இருக்கும்.
இல்லத்தரசிகள், ஓய்வு பெற்றவர்கள், மாத வருமானத்தை விரும்புவோர் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ஒரே கணக்கில் 9 லட்சம், ஜாயிண்ட் அக்கவுண்டில் 15 லட்ச ரூபாய் வரையும் டெபாசிட் செய்யலாம். இந்த கணக்கை திறக்க குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்வது அவசியம். இந்த திட்டத்தின் காலம் ஐந்து ஆண்டுகள்.
மாதாந்திர வருமான திட்டத்தில் கணக்கை தொடங்க உங்களிடம் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு இருக்க வேண்டும். ஏனென்றால் மாதாந்திர வட்டி அந்த சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யப்படும். 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் மாதத்திற்கு 962.50 ரூபாய், 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 1,925 ரூபாயும், 9 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 5775 ரூபாயும், 15 லட்சம் முதலீடு செய்தால் ரூ.9,250 வட்டியாக கிடைக்கும். ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்து அருகில் இருக்கும் தபால் நிலையங்களுக்கு சென்று இந்த கணக்கை தொடங்கலாம்.
பிரசவத்தின்போது தாய் உயிரிழந்ததால், குறைமாதத்தில் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தை தனிமையில் தவித்தது. பிறந்த கணத்திலிருந்தே தாயின் அரவணைப்பைத் தேடி…
மும்பை புறநகர் மின்சார ரயிலில் 20 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட சம்பவத்தில்…
நவம்பர் 6 அன்று, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள வல்ஹல்லா அருகே உள்ள காட்டில், தனது சகோதரருடன் முகாம் இட்டிருந்த…
பெங்களூருவைச் சேர்ந்த ஐடி ஃபிரெஷ் ஃபுட் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா பி.சி., தனது ஊழியர்கள் சொந்தமாகத்…
அகாசா ஏர் விமானத்தில் பயணித்த கைக்குழந்தையை, நிஷாந்த் என்ற விமானப் பணிப்பெண்/பணியாளர் தனது கைகளில் ஏந்தி நடந்து சென்று சமாதானப்படுத்திய…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…