இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அதிலும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் சேமிக்க விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இன்றைய காலத்தில் பலரும் எதிர்கால வாழ்வுக்காக சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். வயதான பிறகும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் நிம்மதியாக வாழ்வதற்கு திட்டமிட்டு சேமிக்க வேண்டியது அவசியமாகும். சரியான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யும்போது முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தை பெற்றுக் கொள்ளலாம். தபால் அலுவலகத்தில் பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.
குறைந்த முதலீட்டில் போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்குகளை தொடங்கலாம். இந்தியாவில் வசிக்கக்கூடிய எந்த ஒரு நபரும் தபால் அலுவலக முதலீடு திட்டத்தில் இணைய முடியும். குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பலவிதமான சேமிப்பு திட்டங்கள் போஸ்ட் ஆபீஸ் செயல்பாட்டில் உள்ளது. அதில் தபால் அலுவலகத்தில் பிரபலமான சேமிப்பு திட்டமாக மாதாந்திர வருமான திட்டம் உள்ளது. பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை பெற விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். அது மட்டுமல்லாமல் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் மற்றும் அரசாங்க ஆதரவும் தபால் அலுவலக மாதாந்திர திட்டத்தில் உள்ளது. நிதி பாதுகாப்பு வேண்டுமென விரும்புபவர்களுக்கும் இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.
தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் தனிப்பட்ட கணக்கில் அதிகபட்சமாக ஒன்பது லட்சம் கூட்டு கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரையும் மெச்சூரிட்டி தொகையாக முதலீட்டாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் இந்த சிறுசேமிப்பு திட்டத்தில் மாதாந்திர வருமானமும் நிலையான வட்டி விகிதமும் கிடைக்கும். இந்த திட்டத்திற்கு தற்போது தபால் அலுவலகம் 7.4 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றது. தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் 5 லட்சம் முதலீட்டுக்கு 3,083.33 மாதாந்திர வருமானமாக கிடைக்கும்.
ஒன்பது லட்சம் ரூபாய் வைப்பு தொகைக்கு மாதந்தோறும் 5,550 மற்றும் 15 லட்சத்துக்கு 9250 தொகையாக மாத வருமானமாக முதலீட்டாளர்கள் பெறலாம்.. ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை தபால் அலுவலக மாதாந்திர திட்டத்தின் கீழ் தொடங்கலாம். அதே சமயம் ஒரு வருடம் கழித்து முன்கூட்டியே இந்த திட்டத்தில் கணக்கை மூடிக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதற்கு இரண்டு சதவீதம் வைப்புத் தொகையில் பிடிக்கப்படும். மூன்று வருடங்கள் கழித்து கணக்கை மூடினால் ஒரு சதவீதம் வைப்புத் தொகையிலிருந்து கழிக்கப்படும்.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…