உங்க கையில் வெறும் ரூ.10 இருந்த போதும்.. நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்.. போஸ்ட் ஆபிஸின் சூப்பரான திட்டம்..!

By Nanthini on டிசம்பர் 6, 2024

Spread the love

இந்தியாவில் மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஏனென்றால் மற்ற திட்டங்களுடன் ஒப்பிடும்போது தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வட்டியும் அதிகம். அதன்படி ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் தினமும் 100 ரூபாய் டெபாசிட் செய்தால் 30 நாட்களில் 3000 ரூபாய் டெபாசிட் செய்து விடுவீர்கள். ஒவ்வொரு மாதமும் இந்த தொகை செலுத்தப்படும் பட்சத்தில் ஐந்து ஆண்டுகளில் 1,80,000 ரூபாயாக டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். மேலும் இதற்கு 6.7 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளில் வட்டி மூலமாக மட்டுமே உங்களுக்கு ரூ.34,097 கிடைக்கும்.

Post office Savings Scheme : NSRDA திட்டம்.. குறைந்த முதலீட்டில் அதிக லாபம்  தரும் சேமிப்பு திட்டம் - எப்படி சேர்வது? இதன் பயன்கள் என்னென்ன?

   

இந்த திட்டத்தின் கணக்கு முதிர்ச்சி அடைந்த பின்னர் மொத்தம் ரூ.2,14,097 உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். அதிக வருமானம் தரக்கூடிய இந்த தபால் நிலைய திட்டத்தில் பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் முதலீடு செய்து வருகிறார்கள்.இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்வதன் மூலமாக 10 ஆண்டுகளில் 8.5 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெற முடியும். இதில் முதலீடு செய்வதற்கான வட்டி விகிதம் கடந்த 2023 ஆம் ஆண்டு 6.5% ஆக இருந்தது. தற்போது அது 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு போஸ்ட் ஆஃபீஸில் வைப்பு நிதி கணக்கை தொடங்க வேண்டும்.

   

100 ரூபாய் போதும்.. ஜாம்ஜாம்ன்னு இருக்கலாம்.. அருமையான ரெக்கரிங் டெபாசிட்  திட்டம்.. மத்திய அரசு செம்ம | Do you know about post office recurring  deposit interest rate and ...

 

இதில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம், அதிகபட்ச உச்சவரம்பு என எதுவும் கிடையாது. இதில் 18 வயது நிறைவடையாதவர்கள் பெயரிலும் கணக்கு தொடங்கலாம். அப்போது பெற்றோரின் பெயரையும் ஆவணத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாய் முதலீடு செய்வதன் மூலமாக மொத்த முதலீட்டு தொகை 60 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதற்கு தினந்தோறும் நீங்கள் வெறும் 165 ரூபாய் சேமித்தால் போதும். ஐந்து ஆண்டுகளில் இந்த திட்டத்தில் மொத்த முதலீடாக மூன்று லட்சம் ரூபாய் இருக்கும்.

ஃபிக்சட் டெபாசிட் Vs ரெக்கரிங் டெபாசிட்: இரண்டில் எது பெஸ்ட்? – News18 தமிழ்

இதற்கு 6.7 சதவீதம் வட்டி கணக்கில் 56 ஆயிரத்து 830 ரூபாய் கிடைக்கும். இதனால் ஐந்து ஆண்டுகளில் முதல் இரவு தொகை மொத்தம் 3,56,830 ரூபாயாக முதலீட்டாளர்கள் பெற முடியும். இதனை மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டித்து பத்து ஆண்டுகள் டெபாசிட் செய்தால் மொத்த தொகையாக 6 லட்சம் ரூபாய் இருக்கும். வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகையாக மொத்தம் 8,54,272 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். . குறைந்தபட்சமாக 10 ரூபாய் என முதலீடு செய்து இத்திட்டத்தில் ஒருவர் இணையலாம். அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற விரும்பினால் உடனே இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயன்பெறுங்கள்..