வெறும் ரூ.1000 முதலீட்டில் மாதந்தோறும் ரூ.9000 தரும்.. போஸ்ட் ஆபீஸின் சூப்பரான சேமிப்பு திட்டம்..!

By Nanthini on அக்டோபர் 21, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். சேமிக்க விரும்புவர்களுக்கு பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை போஸ்ட் ஆபீஸ் செயல்படுத்தி வருகின்றது. தபால் நிலையம் அரசு உடையது என்பதால் முதலீடு செய்யும் பணம் எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். உத்திரவாத வருமானமும் கிடைக்கும் என்பதால் பலரும் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்களில் டெபாசிட் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இந்த நிலையில் போஸ்ட் ஆபீஸ் இல் உள்ள மாதாந்திர வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

   

ஓய்வுக்குப் பிறகு வருமானம் தரும் சேமிப்பு திட்டங்களையும் தபால் அலுவலகங்கள் செயல்படுத்தி வருகிறது. அதன்படி மாதாந்திர வருமானம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெறலாம். இந்த திட்டத்தில் ஒரு முறை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டியின் அடிப்படையில் மாதாந்திர வருமானம் பெறலாம். மாதாந்திர வருமான திட்டத்தில் மொத்தம் ஒன்பது லட்சம் முதலீடு செய்யும் போது மாத வருமானமாக ரூ.9,250 உங்களுக்கு கிடைக்கும்.

   

 

இந்த திட்டத்தில் முதலீட்டாளர் தனது துணைவியருடன் இணைந்து முதலீடு செய்யலாம். அவ்வாறு பதினைந்து லட்சம் டெபாசிட் செய்யும்போது மாதம் தோறும் அதே வருமானத்தை பெற முடியும். ஓய்வு காலத்திற்குப் பிறகு வருமானத்தை இழக்க விரும்பாதவர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வு. தற்போது மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. குறைந்தபட்சமாக ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து இந்த திட்டத்தில் நீங்கள் இணையலாம்.

நிலையான வைப்பு போன்ற நிலையான வருமான திட்டங்களை விட மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு அதிக வட்டி விகிதம் கிடைக்கும். இந்த திட்டத்தில் மாதாந்திர வருமானம் 9,250 ரூபாயுடன் முதிர்வு காலத்திற்குப் பிறகு அசல் தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம். தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்திற்கான முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இதனை 15 ஆண்டுகள் வரையும் நீட்டிக்கலாம். எனவே இந்த திட்டத்தில் உடனே முதலீடு செய்து நீங்களும் பயன்பெறுங்கள்.