இந்தியாவில் மத்திய அரசு மக்களின் நலனுக்காகவும் ஊழியர்களின் நலனுக்காகவும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களின் நலனுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அதிக அளவிலான வட்டியும் வழங்கப்படுகிறது. அதன்படி அடல் ஓய்வூதிய திட்டம் என்பது அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சமூக பாதுகாப்பு திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் 60 வயதிற்கு பிறகு நிலையான வருமானம் கிடைக்கும். இந்த திட்டத்தில் இணைந்தால் மாதம்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் பெறலாம். APY திட்டத்தை தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸில் தொடங்கலாம். இதற்கு வங்கி கணக்கு மற்றும் ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் கேட்கப்படும்.
இதில் கணக்கை தொடங்க வேண்டும் என்றால் 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சமாக மாதம் ரூ.210 முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் செலுத்தலாம். மாதம் ரூ.210 என்றால் தினமும் 7 ரூபாய் சேமித்தல் போதும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 18 ஆண்டுகள் ஆகும். எனவே 18 ஆண்டுகள் நிறைவானதும் ஓய்வூதியமாக மாதம் ரூ.1000 வழங்கப்படும்.நீங்கள் செலுத்தக்கூடிய தொகையைப் பொறுத்து பென்ஷன் தொகையும் மாறுபடும்.
இந்தத் திட்டத்தில் ஆன்லைனில் இ கேஒய்சி மூலமாக இணையும் வசதியும் உள்ளது. ஒருவேளை, சந்தாதாரர் எதிர்பாராமல் இறந்து விட்டால், ஓய்வூதியத்தை அக்கணக்கின் “நாமினி” பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபாசிட் மூலம் சந்தா செலுத்தும் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.