Categories: அரசியல்

“டெல்லி முதல் மதுரை வரை…” திமுகவை துரத்தியடிக்கும் நீதி…! லிஸ்ட் போட்டு சொன்ன அண்ணாமலை…!!

Spread the love

தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்துக்கும், அரசியல் காழ்ப்புணர்வுக்கும், மாண்புமிகு உச்சநீதிமன்றமும், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும், இன்று தகுந்த பாடம் கற்பித்திருக்கிறார்கள்.

1) திமுக எம்எல்ஏவுக்குச் சொந்தமான மருத்துவமனைகளுடன் தொடர்புடைய கிட்னி திருட்டு குறித்து விசாரிக்க, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் அமைக்கக் கூறிய சிறப்புப் புலனாய்வுக் குழுவில், தாங்கள் பரிந்துரைக்கும் அதிகாரிகளையே நியமிக்க வேண்டும் என்ற திமுக அரசின் நிபந்தனையை ஏற்க மறுத்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் தலையிட, மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. திமுக எம்எல்ஏவுக்கு எதிரான விசாரணைக் குழுவில், திமுக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற திமுகவின் நிபந்தனை எவ்வளவு வெட்கக்கேடானது.

2) பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் திரு ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகிய திமுகவுக்கு, அந்த வழக்கிலும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தடை செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் கொலை வழக்கில், சிபிஐ விசாரணைக்கு திமுக அரசு ஏன் பயப்படுகிறது?

3) கரூர் தவெக பேரணியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கில், தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு மதுரை பெஞ்சில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதை எவ்வாறு விசாரித்தது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

4) திருப்பரங்குன்றம் வழக்கில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளில், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்புக்குப் பிறகு, 3வது நீதிபதியான நீதியரசர் திரு. விஜய் குமார் அவர்கள், நீதியரசர் ஸ்ரீமதி அவர்களின் கருத்துக்களுடன் உடன்பட்டு, சிக்கந்தர் தர்காவில், விலங்குகளை பலியிடுவதைத் தடை செய்துள்ளார். இந்த மலையை திருப்பரங்குன்றம் மலை என்றே தொடர்ந்து அழைக்க வேண்டும்.

ஒரே நாளில், டெல்லி முதல் மதுரை வரை, திமுகவின் மனசாட்சியை விட வேகமாக, நீதியும் தர்மமும் திமுகவைத் துரத்திக் கொண்டிருக்கின்றன என பதிவிட்டுள்ளார்.

Devi Ramu

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

11 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

20 minutes ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

31 minutes ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

46 minutes ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

47 minutes ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

52 minutes ago