வானில் நடந்த பயங்கரம்…. 34,000 அடி உயரத்தில் விமானத்தை கடத்த முயற்சி…. துணை விமானிக்கு மரண தண்டனை?… சற்றுமுன் பரபரப்பு தகவல்..!

By Nanthini on ஐப்பசி 6, 2026

Spread the love

துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குப் புறப்பட்ட ‘பிளை துபாய்’ நிறுவனத்திற்குச் சொந்தமான விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஹமாம் அல் ஹம்மாமி என்பவர் விமானத்தைக் கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமானம் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, சதித்திட்டத்தை நிறைவேற்ற முயன்ற துணை விமானியை, கடுமையாக தாக்கப்பட்ட நிலையிலும் இந்திய தலைமை விமானி ஸ்மிட் மச்சார் துணிச்சலுடன் போராடி முறியடித்தார். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட துணை விமானியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையில், இது தற்செயலாக நடந்த நிகழ்வல்ல என்றும், திட்டமிடப்பட்ட பயங்கரவாதச் சதிச்செயல் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல்-ஹம்மாமி கடந்த சில மாதங்களாகவே இஸ்ரேலுக்குச் சேவை வழங்கி வரும் பல்வேறு விமான நிறுவனங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்துள்ளார். மேலும், அவர் ஏற்கனவே பலமுறை இஸ்ரேலுக்குச் சென்று வந்துள்ளதும் அதிகாரிகளின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தீவிரவாதத் திட்டத்தின் பின்னணி குறித்து ஓமன் மற்றும் சவுதி அரேபிய நாட்டு அதிகாரிகளும் அல்-ஹம்மாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

இஸ்ரேல் செல்லும் உணர்திறன் மிக்க வான்வழியில் இயங்கும் விமானத்தில், இதுபோன்ற ஆபத்தான பின்னணி கொண்ட நபரை இயக்க அனுமதித்தது எவ்வாறு என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன. ஐக்கிய அரபு அமீரக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்டுள்ள துணை விமானிக்கு மிகக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர நீதிமன்றத்தில் தீவிரமாக வாதாட முடிவு செய்துள்ளனர். அமீரக வட்டாரங்களின்படி, இத்தகைய தீவிரவாதச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.