தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பித்தல் மற்றும் புதிய சான்றிதழ்கள் வழங்குவதில் நடைபெற்றதாகக் கூறப்படும் சுமார் ரூ.100 கோடி ஊழல் வழக்கு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, வரும் நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த ஊழலின் பின்னணியில் உள்ள நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், லஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதி அன்பில் மகேஸின் மனைவி ஜனனியிடம் கைமாற்றப்பட்டுள்ளதாகப் புதிய தகவல்கள் கசிந்துள்ளன. இதைக் காரணியாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை அல்லது அமலாக்கத்துறை அதிகாரிகளால் நேரடியாக விசாரணை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது. பணத்தின் இறுதிப் பயன்பாடு மற்றும் அதன் வழித்தடங்களைக் கண்டறிய அவரது மனைவியையும் வழக்கின் வளையத்திற்குள் கொண்டுவர அதிகாரிகள் திட்டமிட்டு வருவதால், அவரும் கைது செய்யப்படக் கூடும் என்ற பேச்சு வலுத்து வருகிறது.
