திக் திக் திக்… போனில் பேசிய சில நிமிடங்களில் அரங்கேறிய கொடூரம்… பிரபல யூடியூபர் திடீர் தற்கொலை… காவல்துறை தீவிர விசாரணை…!!

By Swetha on புரட்டாதி 29, 2026

Spread the love

பிரபல சமூக ஊடகத் செல்வாக்காளர் நித்தி திவாரி (30) தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ரௌலியைச் சேர்ந்த இவர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் பெருமளவிலான பின்தொடர்பாளர்களைக் கொண்டு மிகவும் பிரபலமாக விளங்கி வந்தார்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ‘மிஸ் ப்ரெட்டி இந்தியா’ பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, நித்தி திவாரி மாடலிங் மற்றும் நடிப்புத் துறையில் முத்திரை பதிப்பதற்காகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு தனது வீட்டில் அவர் எதிர்பாராதவிதமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரைக் கண்ட குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்பினர்.

   

தற்கொலைக்குச் செல்வதற்கு சற்று முன்பாக நித்தி தொலைபேசியில் ஒருவருடன் காரசாரமாக விவாதித்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது மரணத்திற்குத் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள் காரணமா அல்லது குடும்பத் தகராறுகளா என்ற பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.