Categories: சினிமா

நிஜ படத்தையே மிஞ்சிய திரில் சம்பவங்கள்… பிரபல வில்லன் அசோகனின் காதல் கதை…

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக இருந்தவர் அசோகன். திருச்சிராப்பள்ளியில் பிறந்தவர் அசோகன். இவரது இயற்பெயர் அந்தோணி என்பதாகும். சிறுவயதிலிருந்தே மேடை நாடகங்களில் ஆர்வம் கொண்டு நடிக்க ஆரம்பித்தார் அசோகன். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் அசோகன்.

கல்லூரி படிப்பை முடித்த பின்பு இயக்குனர் டி ஆர் ராமன்னாவை சந்தித்த அசோகன் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டார். அவ்வையார் திரைப்படத்தில் சிறுவேடத்தில் நடித்து அறிமுகமானார் அசோகன். பின்னர் 1959 ஆம் ஆண்டு பெண் குலத்தின் பொன்விளக்கு என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ர்த்தார் அசோகன்.

1961ம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் என்ற திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திராத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் அசோகன். 1960 70களில் புகழின் உச்சியில் இருந்த அசோகன் எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் ஆகியோர் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களிலும் குணசத்திர கதாபாத்திரங்களும் நடித்து பிரபலமானார்.

அந்த நேரத்தில் புகழின் உச்சியில் இருந்த நடிகர் அசோகனின் காதல் திருமணம் ஒரு நிஜ படத்தை மிஞ்சும் அளவுக்கு திரில்லிங்காக இருந்திருக்கிறது. அது என்னவென்று இனி காண்போம். அசோகன் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும்போது தன்னுடன் படித்த சரஸ்வதி என்ற பிராமண பெண்ணை காதலித்தார். சரஸ்வதி அவர்கள் வீட்டில் அசோகன் அந்தோணி என்ற பெயர் கொண்ட கிறிஸ்தவர் என்பதால் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ளவே இல்லை.

பின்னர் சரஸ்வதி அசோகனை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து திருச்சியில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்தார். உடனே அசோகன் இந்த செய்தியை எம்ஜிஆர் இடம் கூறி உதவி கேட்டார். எம்ஜிஆர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முன்னுக்கு வந்து நுங்கம்பாக்கத்தில் ஒரு தேவாலயத்தில் பூட்டப்பட்ட ஆலயத்திற்கு உள்ளே நண்பர்கள் புடை சூழ அசோகனின் திருமணம் நடைபெற்றது. பெண் வீட்டார் பிரச்சினை செய்தாலும் சுமூகமாக விக்கி விட்டு எம்ஜிஆர் இந்த திருமணத்தை செய்து வைத்தார். அசோகன் மற்றும் சரஸ்வதி ஆகியோருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். அதில் ஒருவர்தான் வின்சென்ட் அசோகன் என்று சினிமாவில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

5 seconds ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

48 minutes ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

57 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

1 மணத்தியாலம் ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

1 மணத்தியாலம் ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

1 மணத்தியாலம் ago