விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை மக்கள் விரும்பி பார்ப்பார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக விஜய் டிவியில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3:30 மணிக்கு முத்தழகு சீரியல் ஒளிபரப்பாகிறது.
இந்த சீரியலை அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமாக ரசித்து பார்க்கின்றனர். இந்த சீரியல் ஒளிபரப்பாகி மூன்று ஆண்டுகளாக மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் ஷோபனா கதாநாயகியாக முத்தழகு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு ஜோடியாக ஆஷிஷ் சக்கரவர்த்தி நடிக்கிறார். அது மட்டுமில்லாமல் வைஷாலி, லட்சுமி வாசுதேவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கிராமத்தில் பிறந்த முத்தழகு நகரத்து பின்னணியில் இருக்கும் கதாநாயகனை திருமணம் செய்து கொள்கிறார்.
திருமணத்திற்கு பிறகு முத்தழகு எதிர்கொள்ளும் சிக்கல்களை மையமாக வைத்து இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முத்தழகு சீரியல் கிளைமாக்ஸ் காட்சிகளை எடுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீரியல் நிறைவு பெறுவதாக செய்திகள் உலா வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.