ஜீவன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகராவார். இவரது இயற்பெயர் விஜயபாஸ்கர் ரங்கராஜ் என்பதாகும். 2002 ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் என்ற படத்தில் தோன்றியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஜீவன். 2006 ஆம் ஆண்டு திருட்டுப் பயலே 2007 ஆம் ஆண்டு நான் அவனில்லை ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்தார். இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு மச்சக்காரன் 2008 ஆம் ஆண்டு தோட்டா 2009 ஆம் ஆண்டு நான் அவன் இல்லை பாகம் 2 ஆகிய படங்களில் நடித்தார். அடுத்ததாக இடைவெளி எடுத்துக்கொண்ட ஜீவன் 2015 ஆம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்தார். இது வெளியாகவில்லை. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான பாலாஜி ஜீவன் ஷூட்டிங்கில் எப்படி ஒர்ஸ்டாக நடந்து கொள்வார் என்பதை பற்றி ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளர் பாலாஜி கூறியது என்னவென்றால் ஜீவன் நடித்த இரண்டு படம் ஹிட் ஆகிவிட்டது. அதனால் அவருக்கு மிகவும் தலைக்கனம் ஆகிவிட்டது. தன் பெயரை மிரட்டல் நாயகன் என்று டைட்டில் போடுமாறு அவரே வைத்துக் கொண்டார். அதற்கு அடுத்ததாக சூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது அவருக்கு வேண்டியது எல்லாம் செய்து கொடுத்தே ஆக வேண்டும். தினமும் மதிய சாப்பாட்டுக்கு வான்கோழி பிரியாணியும் காடை வறுவலும் அவருக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அவர் சொல்லும் ஹோட்டலில் வாங்கி கொடுத்தால் மட்டுமே அவர் கேரவனை விட்டு நடிப்பதற்காக இறங்குவார்.

அதற்கு அடுத்ததாக தினமும் 10 ரெட் புல்ஸ் அவருக்கு வாங்கி கொடுத்தே ஆக வேண்டும். ரெண்டு படம் நடித்து ஹிட் ஆயிடுச்சுன்னா அவங்க சூப்பர் ஸ்டார் ஆகிட முடியுமா? ஆனா அவர் அப்படி மனசுல நினைச்சுகிட்டு அந்த மாதிரி தான் நடந்துக்குவார் என்று நடிகர் ஜீவனை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி.
