FLASH: பிரபல நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் தவெகவில் இணைந்தார்… சற்றுமுன் அதிரடி…!!

By Soundarya on ஆனி 13, 2026

Spread the love

தமிழக அரசியல் களம் புதிய திருப்பங்களைச் சந்தித்து வரும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று முக்கிய இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல நடிகர் டி.எஸ்.ஆர். சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் தங்களை தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையினர் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் திரளான இணைப்புத் திருவிழாவில் பங்கேற்று தவெக-வின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டனர்.

கட்சியின் கட்டமைப்பை அடிமட்ட அளவில் இருந்து பலப்படுத்தவும், மாநிலம் தழுவிய அளவில் அதன் வளர்ச்சியை விரிவுபடுத்தவும் இந்த புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அதிரடியாக விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கட்சியின் முக்கியப் பொறுப்பை ஏற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து இன்று பல்வேறு தரப்பினர் இணைந்து வருவது தவெக-வின் அரசியல் நகர்வுகளை மேலும் வேகப்படுத்தியுள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.