#image_title
1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தவர் விக்ரமன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து 90 களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தார்.
அதன் பின்னர் அவர் இயக்கிய நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம், சூர்யவம்சம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற சூப்பர் ஹிட் ஆகி வசூல் மழை பொழிந்தன. ஆனால் 2000 களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் ட்ரண்ட் மாற அவரின் மெலோ டிராமா கதைகள் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.
90 களில் வெற்றியோடு தன்னுடைய திரை வாழ்க்கையை துவங்கிய விக்ரமன் இடையில் பெரும்புள்ளி மற்றும் புதிய மன்னர்கள் ஆகிய படங்களால் சிறு தேக்க நிலையை அடைந்தார். அப்போதுதான் விக்ரமன் பூவே உனக்காக கதையை எழுதி அதை படமாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
அப்பொது தயாரிப்பு நிறுவனம் பல முன்னணி ஹீரோக்களை சொல்லி அதில் நடிக்க வைக்க முயற்சி செய்ததாம். ஆனால் விக்ரமன் படத்தில் விஜய் நடித்தால்தான் சரியாக இருக்கும் என அவரை நடிக்க வைத்து படத்தை எடுத்துள்ளார். சந்தேகங்களோடு ரிலீஸான அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
விஜய்யின் முதல் சூப்பர் ஹிட் படமாக பூவே உனக்காக படம் அமைந்தது. அதன் பின்னர்தான் அவர் மீதான இமேஜ் மாறியது. அதற்கு முன்னர் விஜய் நடித்த படங்கள் சில கிட்டத்டட்ட பி கிரேட் படங்கள் போல இருக்கும். அதனால் அவர் படத்துக்கு பெண் ரசிகைகள் வரமாட்டார்கள்.
இதனால் பூவே உனக்காக படத்துக்கும் ஆரம்பத்தில் சில நாட்கள் பெண் ரசிகைகள் வரவேயில்லையாம். ஆண்கள் மட்டுமே வந்து பார்த்துவிட்டு சென்றார்களாம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல படம் பற்றி பேச்சு மெல்ல பரவி அதன் பிறகு பெண் ரசிகைகள் வர ஆரம்பித்தார்களாம். படமும் 275 நாட்கள் ஓடியதாம். இதை பூவே உனக்காக படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனரும் நடிகருமான ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…
அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…