குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கெரியரை தொடங்கி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று பல விருதுகளை வாங்கி குவித்தவர் தான் முன்னணி நடிகையான சங்கீதா. பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கூட்டம் உருவாகியது. தமிழை விட தெலுங்கில் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்று முன்னணி நடிகையாக மாறினார். பூவே உனக்காக திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரே ஒரு மகள்தான் உள்ளார்.
தன்னுடைய மகளின் படிப்பை பற்றியும் அவருடைய வேலையை பற்றியும் சங்கீதா சமீபத்திய ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதாவது சங்கீதாவின் ஒரே ஒரு மகளுக்கு தற்போது 24 வயது ஆகிறதாம். பள்ளிப்படிப்பை எல்லாம் முடித்துவிட்டு பைலட்டாக வேண்டுமென்று சங்கீதாவின் மகள் ஆசைப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் இது சங்கீதாவுக்கு யோசனையாக இருந்த நிலையில் அவருடைய மகள் அந்த முடிவில் மாறாமல் இருந்துள்ளார்.
அதனால் பள்ளி படிப்பை எல்லாம் முடித்துவிட்டு பைலட் ஆவதற்கான படிப்பை ப்ளோரிடாவில் சங்கீதாவின் மகள் தொடங்கியுள்ளார். அங்கு பயிற்சிகளையும் எடுத்துக்கொண்டு படிப்பை எல்லாம் முடித்துவிட்டு சென்னை திரும்பியவர் இப்போது இந்தியாவுக்குள் பைலட்டாக ஓட்டிக் கொண்டிருக்கிறாராம். எப்போதாவது ஒருமுறை அவர் ஓட்டும் பிளைட்டில் நாங்கள் பயணம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு கொண்டிருக்கிறோம் என்று சங்கீதா தன் கணவருடன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…
மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…
கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…
கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…