“இனி நாம் சந்திப்பது எப்போது” கணவரின் உடலை கட்டியணைத்து முத்தமிட்டு கதறிய பூர்ணிமா.. வைரலாகும் நெகிழ்ச்சி காட்சி…!!

By Soundarya on ஆனி 28, 2026

Spread the love

தமிழ் திரை உலகின் ‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் மூத்த இயக்குநர் கே. பாக்யராஜ் (73), மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவரது மறைவு செய்தியறிந்து ஒட்டுமொத்தத் திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் மூழ்கியுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு முதலமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரஜினி, கமல், தனுஷ் உள்ளிட்ட முன்னணித் திரை நட்சத்திரங்கள் நேரில் வந்து தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் முழு அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. அப்போது, அங்கு திரண்டிருந்த உறவினர்களிடையே நெஞ்சை உருக்கும் சோகக் காட்சிகள் அரங்கேறின. பாக்யராஜின் உடலை அவரது மனைவி பூர்ணிமா கண்ணீர் மல்கக் கட்டியணைத்து, முத்தமிட்டுத் தனது நெகிழ்ச்சியான இறுதி அஞ்சலியைச் செலுத்தினார். அவருடன் மகன், சாந்தனு, மகள் சரண்யா, மருமகள் கீர்த்தி மற்றும் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரும், திரையுலகப் பிரபலங்களும் கண்ணீருடன் தங்களின் அன்பான பிரியாவிடையை அவருக்குக் கொடுத்தனர்.