‘பொன்னியின் செல்வன்’ குந்தவை போல உடை அணிந்த பிரபல நடிகை …..த்ரிஷாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல இருக்கே….இணையத்தை கலக்கும் புகைப்படம் இதோ…..

By Begam on ஐப்பசி 1, 2022

Spread the love

நடிகை சனம் செட்டி ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘குந்தவை’ கதாபாத்திரத்தில் வரும் த்ரிஷாவை போன்று உடை அணிந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அம்புலி, மாயை, விலாசம் உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை சனம் ஷெட்டி. ஆனால் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றில் பல படங்கள் நடித்துள்ளார்.

   

   

இவர் 2016 இல் ‘மிஸ் தென்னிந்தியா’ என்ற அழகிப் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் எப்பொழுதும் கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

 

தற்பொழுது நேற்றைய தினம் ரிலீசான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்த நடிகை த்ரிஷாவை போன்று உடை அணிந்து போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ‘நடிகை த்ரிஷாவுக்கே டஃப் கொடுப்பாரு போல இருக்கே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக…