‘விஜயகாந்த் சாருக்கும் எனக்கும் வந்த மனஸ்தாபம்.. நான் ஷூட்டிங்கையே கேன்சல் பண்ணிவிட்டேன்’ – பொன்னம்பலம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

By vinoth on ஆவணி 31, 2024

Spread the love

90’s காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் பொன்னம்பலம். முதலில் அவர் சண்டை கலைஞராகத்தான் இருந்தார். ஆனால் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.  அவருக்கு மிகப்பெரிய பிரபலத்தைப் பெற்றுத்தந்த கதாபாத்திரம் என்றால் அது நாட்டாமை படம்தான்.

அவர் நடித்த படங்களில் முக்கியமானவையாக வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன், பெரிய மருது, நாட்டாமை, மாநகர காவல், துள்ளாத மனமும் துள்ளும் மற்றும் முகவரி ஆகியவற்றை சொலல்லாம். தமிழைப் போலவே தெலுங்கு படங்களிலும் அவர் ஏராளமான வில்லன் வேடங்களில் நடித்தார். அவரின் உருவமும் மிரட்டலான கண்பார்வையும் அவரைப் பார்க்கும் யாவருக்குமே ஒரு சிறு பயத்தை உருவாக்கும் என்று சொன்னால் மிகையாகாது.

   

எல்லாக் கலைஞர்களுக்கும் நடப்பது போல இவருக்கும் ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் ஆனது. அதன் பின்னர் அவரின் ரி எண்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தார். ஆனாலும் அதில் அவருக்கு கெட்ட பெயர் கிடைக்கும் விதமாகவே நடந்துகொண்டார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரின் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அவரின்  உறவினர் ஒருவரே அவருக்கு ஸ்லோ பாய்சன் வைத்ததால்தான் அவர் உடல்நலம் கெட்டதாக சொல்லப்பட்டது.

   

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த் நேர்காணல் ஒன்றில் விஜயகாந்துக்கும் தனக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்து பேசியுள்ளார். அதில் “பெரிய மருது என்ற படத்தில் விஜயகாந்த் சாரோடு இணைந்து நடித்தேன். அப்போது எனக்கும் அவருக்கும் ஒரு உக்கிரமான சண்டைக் காட்சி. அதில் ஒரு ஷாட்டில் விஜயகாந்த் சார் பறந்து பல்டி அடித்து என் தலையில் வந்து உதைப்பது போல காட்சி.

 

ஆனால் எனக்கு சிறு வயதில் இருந்தே தலையில் யாராவது அடித்தால் கோபம் வரும். அதனால் ஷாட்டை மாற்றிக் கொள்ளலாம் என நான் சொன்னேன். ஆனால் மாஸ்டர் எல்லோரும் வேண்டாம், உன் தலையில் படாதவாறு எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்லி எடுத்தார்கள். நான் சொன்னது போல விஜயகாந்த் சார் என் தலையில் நங்கென்று உதைத்துவிட்டார். எனக்குக் கோபம் வந்துவிட்டது. அனைவரும் வந்து என்னை சமாதானப்படுத்தினர்.

விஜயகாந்த் சார் வந்து தோளில் கைபோட்டு சமாதானப்படுத்தினார். நான் அதற்கு மேல் அன்று நடிக்க முடியாது என சொல்லிவிட்டேன். விஜயகாந்த் சார் எனக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து ரூமுக்கு அனுப்பினார். அதன் பின்னர் அன்று வேறு காட்சிகளை எடுத்தார்கள்” எனக் கூறியுள்ளார்.