ஒன்றரை வருட சர்ச்சை வழக்கு…. “யாரோட மனசாவது புண்பட்டிருந்தா”…. 76-வது பிறந்தநாளில் மேடையிலேயே மன்னிப்பு கேட்ட பொன்முடி….!

Spread the love

முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி, சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் சைவம் மற்றும் வைணவப் பிரிவுகள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒப்பீடு பெருத்த எதிர்ப்பைக் கிளப்பியது. அவரது சொந்தக் கட்சியினரே இந்த பேச்சைக் கடுமையாக விமர்சித்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். மேலும், இதன் தொடர்ச்சியாக உருவான அரசியல் சூழல்களுக்கு இடையே, அவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்தும் ஒதுங்கியிருந்தார்.

இந்த நிலையில், தனது 76-வது பிறந்தநாளை விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக தொண்டர்களுடன் பொன்முடி கொண்டாடினார். பிறந்தநாளையொட்டி கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் வாழ்த்துகளைப் பெற்றதாகத் தெரிவித்த அவர், பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் கழகத் தலைவரின் வழியில் திராவிட இயக்கக் கொள்கைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த காலங்களில் தான் பேசிய பேச்சு தொடர்பான வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதைக் சுட்டிக்காட்டினார். தனது அன்றைய பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துள்ளதாகக் கூறிய அவர், வழக்கு தொடுத்த சகோதரி உட்பட மனவேதனை அடைந்த அனைவரிடமும் மீண்டும் உளமார்ந்த மன்னிப்பையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.

மேலும் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்துப் பேசிய அவர், ஸ்டாலின் மக்களிடையே மிகுந்த செல்வாக்குடன் விளங்குவதாகவும், மக்கள் நிலைமையை உணர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை மாணவர்களின் விழிப்புணர்வு காரணமாகத் திரும்பப் பெறப்பட்டதைப் பாராட்டிய அவர், மாணவர் பருவம் முதலே கொள்கைகளுக்காகப் போராடும் மாணவர்களின் விழிப்புணர்வுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago